சில குறிப்புகள்
1.பீஹாரிலிருந்து திரும்பி வந்து சென்னையில் இரண்டு மாதங்கள் R&D செய்துகொண்டிருந்தேன். மறுபடியும் பீஹார் செல்ல மேலதிகாரி உத்தரவிட்டபோது செல்ல விருப்பமில்லை என்றேன். போய்த்தான் ஆகவேண்டும் என்றார். வேறு வழியில்லாமல் நான் கம்பெனியை விட்டு போக வேண்டிய வழிகளில் இறங்கினேன்.
2.உடன் பயின்ற கல்லூரித் தோழி அவள் வேலை செய்யும் நிறுவனத்தில் என்னைப் ப்ற்றிய விபரங்களைத் தரவும், நான் நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப் பட்டேன்.இரண்டு நேர்காணல்கள் முடிந்து இறுதியாய் அந்நிறுவனத்தின் R&D பிரிவு ( அங்கேயும் R&D) பொது மேலாளரிடம் மற்றுமொரு நேர்காணல்.தேர்ந்தெடுக்கப்பட்டால் நிறைய பயணம் செய்ய வேண்டுமென்றார். நான் எனது பிஹார் பயணம் பற்றிக் கூறினேன்.அவர் சிரித்துக் கொண்டே, "பிஹாருக்கெல்லாம் அனுப்பமாட்டோம், டெல்லிக்குப் போகவேண்டியிருக்கலாம்" என்றார்.ஜெர்மனிக்குப் போகவேண்டும் என்று சொன்னால் நான் பயந்துவிடுவேன் என்று அவர் எண்ணியிருக்கக் கூடும்.
3.நேர்காணல் முடிவை உடனே சொல்ல வெண்டும் இல்லையெனில் நான் பிஹார் சென்றுவிடுவேன் என்று சொன்னேன்(மிரட்டினேன்). உடனே சொன்னார்கள் . அடுத்த பத்து நாட்களில் அந்த நிறுவனத்தில் சேர்ந்தேன் ( இன்னமும் அங்கு தான் பணி புரிகிறேன்).
4.சேர்ந்த சில நாட்களிலேயே உடல் நிலை மறுபடியும் குன்றியது. குறைந்த இரத்த அழுத்தம் மற்றும் இரத்தத்தில் சர்க்கரை அளவு குறைவு என்றார்கள். இரண்டு மாதங்கள் அலுவலத்திலேயே ஓய்வு தந்தார்கள் (cool-off period). அதாவது அலுவலகம் வந்து செல்ல வேண்டும். அதுதான் வேலை
5.உடல் நிலை தேறியதும், அடுத்த மாதமே பயணம் மேற்கொண்டேன் . ஜெர்மனியின் மியூனிக் நகர் என்னை வரவேற்றது.மூன்று மாதங்களுக்கு ஜெர்மனி.முதல் வெளிநாட்டுப் பயண ஆச்சரியங்கள் முடிவதற்குள் திரும்பினேன்.
6. அடுத்த மூன்று மாதங்களில் இரண்டாவது பயணம். இம்முறை ஓராண்டுக்கும் மேல்.சில நாடுகளைச் சுற்றும் வாய்ப்பு. மீண்டும் இந்தியா திரும்பினேன்.
7. ஒரு சிறிய இடைவெளிக்குப் பின் மறுபடியும் ஜெர்மனி . அங்கு பணி முடிவடைந்ததும் தற்போது ஸ்வீடன்.
8. சுவிட்சர்லாந்து, பெல்ஜியம் , நெதர்லாண்ட்ஸ்( ஹாலந்து) , ஆஸ்திரியா, ப்ரான்ஸ், லக்ஸம்பர்க், நார்வே , டென்மார்க் போன்ற நாடுகளில் இதுவரை உலாவியிருக்கிறேன். பின்லாந்து மற்றும் போர்ச்சுகல் பயணம் வெகு விரைவில்.
9.வலைப்பூ -வில் இரண்டு வாரங்களாக இப்பதிவினைப் பற்றி(ஊக்குவிக்கும் நோக்கில்) நல்ல கருத்துக்கள் தெரிவிக்கப் பட்டிருந்தன. அடுத்த பதிவிலிருந்து ஐரோப்பிய பயணக் கட்டுரைகளை எழுத ஆரம்பித்து விடுகிறேன்.
2 Comments:
எழில், உங்கள் பயண அனுபவங்கள் நன்றாக இருக்கின்றன. ஐரோப்பாப் பயண அனுபவங்களைப் படிக்க ஆவல். முடிந்தால் அங்கங்கு சில படங்களும் இடுங்கள். நன்றாக இருக்கும்.
நல்ல பயண அனுபவங்கள் படங்களையும் சேருங்களேன் உங்களிடம் இல்லாவிட்டாலும் கூட இணையத்தில் பொருத்தமாக இருக்கும்
Post a Comment
<< Home